தரவு கோப்பு

இலங்கையின் சமீபத்திய நகர்ப்புற அபிவிருத்தி தொடர்பான முதற்கட்ட விரிவான மதிப்பீட்டை  இலங்கை நகரங்களின் நிலை 2018 தொடர்பான இந்த அறிக்கை வழங்குகிறது .21 மாத கடின உழைப்பின் ஒரு முக்கிய வெளியீடாக இலங்கை  நகரங்களின் நிலை தொடர்பான திட்டம் அமைந்துள்ளது .இது இலங்கையில் நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய நகர்ப்புற அபிவிருத்திக்கு உதவும் நகர்ப்புறம் தொடர்பான தரவுத்தளம் மற்றும் அறிக்கை ஆகிய இரு அம்சங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது .

இந்த அறிக்கையானது தரவுகள் மற்றும் பகுப்பாய்வுகளுடனான 10 அத்தியாயங்களை உள்ளடக்கியது.இது இலங்கையின் தலைநகரங்களின் விரிவான துறைசார் மதிப்பீடுகளை வழங்கவும் ,ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கை பகுப்பாய்வுகளை முன்வைக்கவும் உதவுகிறது .இதனுடாக இவ்வறிக்கையானது தனது பிரதான இலக்காக ஆதாரபூர்வனமான நகர்ப்புற கொள்கை மற்றும் நாட்டின் நகர்ப்புற மையங்களின் சமூக பொருளாதார அபிவிருத்தியை திட்டமிடுதலில் ஆதரவு செலுத்துவதை இலக்காக கொண்டுள்ளது .

இவ்வறிக்கை ஐ.நா வதிவிடத்தினால் (UN-Habitat) உருவாக்கப்பட்ட செயல்முறை மூலம் இலங்கையின் பிரதான நகரங்களின்  நிலவரங்களை ஆராய்தல் மற்றும் நாட்டின் நகர்ப்புற வளர்ச்சியில் ஒட்டு மொத்த போக்குகளை முன்னிலைப்படுத்தல் ஆகியவற்றை வரைகிறது .மேலும் இந்த அறிக்கை நிலப்பயன்பாடு மற்றும் நகர்ப்புற விரிவாக்க முறைமைகள் பற்றி விளக்குவதற்கு அண்மைய செயற்கைகோள் படங்களை பயன்படுத்தியுள்ளது.அத்துடன் புள்ளிவிபரவியல் தரவுகள் , ஆய்வுகள்  ,உள்ளூர் பங்குதாரர்களுடனான நகர பயிற்சி பட்டறைகள் என்பனவும் தகவல்களை திரட்டும் ஊடகங்களாக இவ்வறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் ஒன்பது மாகாணங்களின் தலைநகரங்களின் விரிவான இந்த பகுப்பாய்வுகளில், அனுராதபுரம் (வடமத்திய மாகாணம் ), பதுளை (ஊவா மாகாணம் ), யாழ்ப்பாணம் (வட மாகாணம்),  கண்டி (மத்திய மாகாணம் ), குருநாகல் (வட மேல் மாகாணம் ), இரத்தினபுரி (சப்ரகமுவா மாகாணம் ), திருகோணமலை (கிழக்கு மாகாணம் ) அத்துடன் மேல் மாகாணம் மற்றும் நாட்டின் தலைநகரமாகிய கொழும்பு ஆகியன விரிவாக பகுப்பாயப்பட்டுள்ளன .

அனைத்து இலங்கையருக்குமான சிறந்த நகர்ப்புற எதிர்காலத்தை குறிக்கோளாக கொண்டு இந்த அறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை நடைமுறைப்படுத்தல், புதிய நகரங்களுக்கான நிகழ்ச்சித்திட்ட நிரல், அதேபோல இலங்கை அரசின் முக்கிய மூலோபாய அவணங்களையும்  இவ்வறிக்கை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இலங்கை நகரங்களின் குறிக்கோள்களானது போட்டித்தன்மை (competitiveness) , உள்ளுணர்வு(inclusivity) , மீள்திறன் ( resilience) , பாதுகாப்பு (safety)  மற்றும் நிலைத்திருக்கும் தன்மை (sustainability ) ஆகிய 05 பிரதான அம்சங்களை கொண்டுள்ளது. இந்த பிரதான அம்சங்களே பின்வரும் அத்தியாயங்களில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.

ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கை முறைமையை வழங்குவதன் மூலம் இவ் அறிக்கை நிறைவு பெறுகிறது. இந்த முறைமை , கொள்கை வகுப்பாளர்களுக்கு துறைசார் கொள்கைகளை அடையாளங்கண்டுகொள்ள எதுவான மாதிரி வடிவம் ஒன்றை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இது பல்வேறு துறைசார் பிரிவுகளில் காணப்படும் தடைகளை அகற்றவும், சகல இலங்கையர்களுக்கும் சிறந்த நகர்ப்புற  எதிர்காலத்தை  நோக்கி பயணிக்கவும் வழிகோலும் .

publication thumbnail
நிர்வாக சுருக்கம் (SOSLC அறிக்கை 2018)

ஸ்ரீலங்கா நகரங்கள் 2018 (சோ.ச.ச.க.) அறிக்கையின் 10 அத்தியாயங்கள் தரவு மற்றும் பகுப்பாய்வு, இலங்கையின் நகரங்கள் பற்றிய விரிவான துறை மதிப்பீடு மற்றும் தற்போதைய மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கை பகுப்பாய்வு ஆகியவற்றை வழங்குகின்றன. 

publication thumbnail
வே முன்னோக்கு (SOSLC அறிக்கை 2018)

இலங்கையின் நகரங்களுக்கான இந்த வரைபட வரைபடம் நாட்டின் நகர்ப்புற மையங்களில் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கான சாத்தியமான எதிர்கால கொள்கை மற்றும் வேலைத்திட்ட வழிகாட்டல்களை விவரிக்கின்றது. 

publication thumbnail
முறைகள் (SOSLC அறிக்கை 2018)

நில பயன்பாட்டு வரைபடங்களை உருவாக்கும் முறை, நடுத்தர உயர்தல் செயற்கைக்கோள் படங்கள், மக்கள் தொகை மதிப்புகள் மற்றும் பெலன்விலா அசிடிடியா ஈர நிலப்பகுதிக்கான இடஞ்சார்ந்த தரவை உருவாக்கும் முறையிலிருந்து தரவு பிரித்தெடுத்தல். 

publication thumbnail
வரைபடங்கள் (SOSLC அறிக்கை 2018)

இந்த பிரிவில் முக்கிய 3 வகையான வரைபடங்கள் உள்ளன. அவை நகர்ப்புற விரிவாக்க வரைபடங்கள், நில பயன்பாட்டு வரைபடங்கள் மற்றும் பெறப்பட்ட வரைபடங்கள். உருவாக்கப்பட்ட துல்லியமான நில பயன்பாடு 2017 வரைபடங்கள், இரண்டாம்நிலை தரவு (கணக்கெடுப்பு துறை), புல சரிபார்ப்பு (ஓபன்ஸ்ட்ரீட்மேப்) மற்றும் யுடிஏ வரைபடங்களை அ

publication thumbnail
நகரம் சுயவிவரங்கள் (SOSLC அறிக்கை 2018)

பிரிவு ஒவ்வொரு மாகாண தலைநகரத்திலும் ஒரு விரிவான தரவு தொகுப்புடன் சுருக்கமான கண்ணோட்டத்தை உள்ளடக்கியுள்ளது. தரவு ஒவ்வொரு நகரத்திற்கும் முறையே முதன்மை, இரண்டாம் மற்றும் ஸ்பேஷியல் தரவு பிரித்தெடுப்புகளைக் கொண்டுள்ளது. 

publication thumbnail
dsC

ddc