வெளியீடு

இலங்கையின் சமீபத்திய நகர்ப்புற அபிவிருத்தி தொடர்பான முதற்கட்ட விரிவான மதிப்பீட்டை  இலங்கை நகரங்களின் நிலை 2018 தொடர்பான இந்த அறிக்கை வழங்குகிறது .21 மாத கடின உழைப்பின் ஒரு முக்கிய வெளியீடாக இலங்கை  நகரங்களின் நிலை தொடர்பான திட்டம் அமைந்துள்ளது .இது இலங்கையில் நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய நகர்ப்புற அபிவிருத்திக்கு உதவும் நகர்ப்புறம் தொடர்பான தரவுத்தளம் மற்றும் அறிக்கை ஆகிய இரு அம்சங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது .

இந்த அறிக்கையானது தரவுகள் மற்றும் பகுப்பாய்வுகளுடனான 10 அத்தியாயங்களை உள்ளடக்கியது.இது இலங்கையின் தலைநகரங்களின் விரிவான துறைசார் மதிப்பீடுகளை வழங்கவும் ,ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கை பகுப்பாய்வுகளை முன்வைக்கவும் உதவுகிறது .இதனுடாக இவ்வறிக்கையானது தனது பிரதான இலக்காக ஆதாரபூர்வனமான நகர்ப்புற கொள்கை மற்றும் நாட்டின் நகர்ப்புற மையங்களின் சமூக பொருளாதார அபிவிருத்தியை திட்டமிடுதலில் ஆதரவு செலுத்துவதை இலக்காக கொண்டுள்ளது .

இவ்வறிக்கை ஐ.நா வதிவிடத்தினால் (UN-Habitat) உருவாக்கப்பட்ட செயல்முறை மூலம் இலங்கையின் பிரதான நகரங்களின்  நிலவரங்களை ஆராய்தல் மற்றும் நாட்டின் நகர்ப்புற வளர்ச்சியில் ஒட்டு மொத்த போக்குகளை முன்னிலைப்படுத்தல் ஆகியவற்றை வரைகிறது .மேலும் இந்த அறிக்கை நிலப்பயன்பாடு மற்றும் நகர்ப்புற விரிவாக்க முறைமைகள் பற்றி விளக்குவதற்கு அண்மைய செயற்கைகோள் படங்களை பயன்படுத்தியுள்ளது.அத்துடன் புள்ளிவிபரவியல் தரவுகள் , ஆய்வுகள்  ,உள்ளூர் பங்குதாரர்களுடனான நகர பயிற்சி பட்டறைகள் என்பனவும் தகவல்களை திரட்டும் ஊடகங்களாக இவ்வறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் ஒன்பது மாகாணங்களின் தலைநகரங்களின் விரிவான இந்த பகுப்பாய்வுகளில், அனுராதபுரம் (வடமத்திய மாகாணம் ), பதுளை (ஊவா மாகாணம் ), யாழ்ப்பாணம் (வட மாகாணம்),  கண்டி (மத்திய மாகாணம் ), குருநாகல் (வட மேல் மாகாணம் ), இரத்தினபுரி (சப்ரகமுவா மாகாணம் ), திருகோணமலை (கிழக்கு மாகாணம் ) அத்துடன் மேல் மாகாணம் மற்றும் நாட்டின் தலைநகரமாகிய கொழும்பு ஆகியன விரிவாக பகுப்பாயப்பட்டுள்ளன .

அனைத்து இலங்கையருக்குமான சிறந்த நகர்ப்புற எதிர்காலத்தை குறிக்கோளாக கொண்டு இந்த அறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை நடைமுறைப்படுத்தல், புதிய நகரங்களுக்கான நிகழ்ச்சித்திட்ட நிரல், அதேபோல இலங்கை அரசின் முக்கிய மூலோபாய அவணங்களையும்  இவ்வறிக்கை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இலங்கை நகரங்களின் குறிக்கோள்களானது போட்டித்தன்மை (competitiveness) , உள்ளுணர்வு(inclusivity) , மீள்திறன் ( resilience) , பாதுகாப்பு (safety)  மற்றும் நிலைத்திருக்கும் தன்மை (sustainability ) ஆகிய 05 பிரதான அம்சங்களை கொண்டுள்ளது. இந்த பிரதான அம்சங்களே பின்வரும் அத்தியாயங்களில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.

ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கை முறைமையை வழங்குவதன் மூலம் இவ் அறிக்கை நிறைவு பெறுகிறது. இந்த முறைமை , கொள்கை வகுப்பாளர்களுக்கு துறைசார் கொள்கைகளை அடையாளங்கண்டுகொள்ள எதுவான மாதிரி வடிவம் ஒன்றை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இது பல்வேறு துறைசார் பிரிவுகளில் காணப்படும் தடைகளை அகற்றவும், சகல இலங்கையர்களுக்கும் சிறந்த நகர்ப்புற  எதிர்காலத்தை  நோக்கி பயணிக்கவும் வழிகோலும் .

publication thumbnail
Distribution of undeserved settlements in Colombo MC in 2017

கொழும்பு முனிசிபல் கவுன்சிலின் குறைந்த வருவாய் குடியிருப்பாளர்கள் மூன்று பிரிவுகளாக (சாந்தி, சேரி மற்றும் குறைந்த வருமான உயர் உயர்வு) பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த அடுக்கின் தரவு மூலமானது நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்.

publication thumbnail
Distribution of undeserved settlements in Kandy MC

State of Sri Lankan cities created this spatial layers. Five major clusters have been identified.

publication thumbnail
Waste Wise Cities Newsletter

UBS is pleased to share with you the 5th issue of the Waste Wise Cities Newsletter, which focuses on SDG indicator 11.6.1. and how it can be used to support cities in improving their waste management systems.

 

publication thumbnail
Database Module – I

Database Module – I

publication thumbnail
Database Module – II

Database Module – II

publication thumbnail
SOSLC இணையதளத்தில் இடஞ்சார்ந்த தரவைப் பதிவேற்றும் செயல்முறை

SOSLC இணையதளத்தில் இடஞ்சார்ந்த தரவைப் பதிவேற்றும் செயல்முறை

publication thumbnail
நிர்வாக சுருக்கம் (SOSLC அறிக்கை 2018)

ஸ்ரீலங்கா நகரங்கள் 2018 (சோ.ச.ச.க.) அறிக்கையின் 10 அத்தியாயங்கள் தரவு மற்றும் பகுப்பாய்வு, இலங்கையின் நகரங்கள் பற்றிய விரிவான துறை மதிப்பீடு மற்றும் தற்போதைய மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கை பகுப்பாய்வு ஆகியவற்றை வழங்குகின்றன. 

publication thumbnail
முன்னோக்கி செல்லும் பாதை (SOSLC அறிக்கை 2018)

இலங்கையின் நகரங்களுக்கான இந்த வரைபடம் நாட்டின் நகர்ப்புற மையங்களில் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கான சாத்தியமான எதிர்கால கொள்கை மற்றும் வேலைத்திட்ட வழிகாட்டல்களை விவரிக்கின்றது. 

publication thumbnail
முறைகள் (SOSLC அறிக்கை 2018)

நில பயன்பாட்டு வரைபடங்களை உருவாக்கும் முறை, நடுத்தர உயர்தல் செயற்கைக்கோள் படங்கள், மக்கள் தொகை மதிப்புகள் மற்றும் பெலன்விலா அசிடிடியா ஈர நிலப்பகுதிக்கான இடஞ்சார்ந்த தரவை உருவாக்கும் முறையிலிருந்து தரவு பிரித்தெடுத்தல். 

publication thumbnail
வரைபடங்கள் (SOSLC அறிக்கை 2018)

இந்த பிரிவில் முக்கிய 3 வகையான வரைபடங்கள் உள்ளன. அவை நகர்ப்புற விரிவாக்க வரைபடங்கள், நில பயன்பாட்டு வரைபடங்கள் மற்றும் பெறப்பட்ட வரைபடங்கள். உருவாக்கப்பட்ட துல்லியமான நில பயன்பாடு 2017 வரைபடங்கள், இரண்டாம்நிலை தரவு (கணக்கெடுப்பு துறை), துறை சரிபார்ப்பு (openstreetmap) மற்றும் UDA வரைபடங்கள்.

publication thumbnail
நகர சுயவிவரங்கள் (SOSLC அறிக்கை 2018)

பிரிவு ஒவ்வொரு மாகாண தலைநகரத்திலும் ஒரு விரிவான தரவு தொகுப்புடன் சுருக்கமான கண்ணோட்டத்தை உள்ளடக்கியுள்ளது. தரவு ஒவ்வொரு நகரத்திற்கும் முறையே முதன்மை, இரண்டாம் மற்றும் இடம் சார்ந்த தரவு பிரித்தெடுப்புகளைக் கொண்டுள்ளது. 

publication thumbnail
கொழும்பு நகராட்சி பகுதி

கொழும்பு நகராட்சி மன்றம் 4361 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

publication thumbnail
கொழும்பு நிர்வாக வரம்புகளில் கிராம நிலதாரி பிரிவுகளின் விநியோக வரைபடம்

கொழும்பு முனிசிபல் கவுன்சில் பகுதியில் உள்ள இன / பாலின / வயது அமைப்பு, அதன் 54 கிராம நிலதாரி பிரிவுகளில் ஒவ்வொன்றிற்கும் விரிவாக உள்ளது.

publication thumbnail
கொழும்பு நகரத்தின் குழாய் நீர் பாதைகளின் வரைபடம்

நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் தரவு. இந்த வரைபடத்தில் குழாய் மூலம் நீர் விநியோக கோடுகள் மற்றும் குழாய் விட்டம் ஆகியவை அடங்கும், இதில் குழாய்வழிகள் நிறுவப்பட்ட ஆண்டு அடங்கும்.

publication thumbnail
முன்னறிவிக்கப்பட்ட கடல் மட்ட உயர்வு மற்றும் அடுத்த 100 ஆண்டுகளில் நில பயன்பாட்டில் ஏற்படும் பாதிப்புகள்

கொழும்பு நகரம் ஒரு கடலோரப் பகுதி, மற்றும் கடல் மட்டங்களுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியது காலநிலை மாற்றம். இங்கு வழங்கப்பட்ட தரவு ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான குழுவை (ஐபிசிசி) அடிப்படையாகக் கொண்டது. பாதிப்பு பகுதி அதன் நில பயன்பாட்டுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

publication thumbnail
கழிவுநீர் வலையமைப்பு மற்றும் உந்தி நிலையங்களின் வரைபடம்

இந்த பிரிவில் கழிவுநீர் குழாய் விநியோகம், உந்தி நிலையங்கள் மற்றும் கடல் வெளியேற்றங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. தகவலின் ஆதாரம்: கொழும்பு நகராட்சி மன்றம். குறிப்பு: தரவு மூலத்தில் கோண வேறுபாட்டிற்கு அடுக்குகளில் லேசான மாற்றம் உள்ளது. இதை மனதில் வைத்து பார்க்க வேண்டும்.

publication thumbnail
பஸ் வழித்தடங்களின் வரைபடம் மற்றும் கொழும்பு நகரத்தில் அவற்றின் தொடக்க புள்ளிகள்

பஸ் வழித்தடங்கள், பஸ் பாதை எண்கள் மற்றும் தொடக்க மற்றும் இறுதி புள்ளிகள் பற்றிய துல்லியமான தகவல்கள் இதில் உள்ளன. Routemaster.lk வலைப்பக்கத்திலிருந்து தரவைப் பயன்படுத்தி SoSLC திட்டத்தின் கீழ் இந்த தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டது.